இந்தியா வரும் 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை தலைநகர் தில்லியில் இந்திய பெருங்கடல் கடற்படைகள் மாநாட்டை நடத்த உள்ளது. இந்த மாநாட்டில் தகவல் பரிமாற்றம் மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாடு ஆகியவை விவாதிக்கப்படும், மேலும் இது சாகர் திட்டத்தின் ஒரு அங்கமாகும். இந்த இரண்டு நாள் மாநாட்டில் இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், ஒமன், ஈரான், பாகிஸ்தான், வங்கதேசம், தாய்லாந்து, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா மற்றும் ஃபிரான்ஸ் ஆகிய நாடுகள் பங்கு பெறுகின்றன.
Read Moreநேற்று தரைப்படையின் வடக்கு பிராந்திய தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல் ஒய்.கே ஜோஷி லடாக் சென்றார். அங்கு அவர் படைகளை விலக்கும் நடவடிக்கை குறித்து கேட்டறிந்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். பின்னர் களத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு நன்றிகளையும் பாராட்டுகளையும் அவர் தெரிவித்தார்.
Read Moreஜம்மு காஷ்மீர் விசிட் 22 நாட்டு பிரதிநிதிகள் வருகை !! ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆய்வு மேற்கொள்ள 22 நாட்டு பிரதிநிதிகள் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளனர். பிரேசில், கியூபா, எஸ்டோனியா, ஃபின்லாந்து, தஜிகிஸ்தான், ஃபிரான்ஸ், அயர்லாந்து, நெதர்லாந்து, போர்ச்சுகல், ஐரோப்பிய ஒன்றியம், வங்கதேசம்,மலாவி, எரிட்ரியா,ஐவரி கோஸ்ட், கானா, செனிகல், ஸ்வீடன், இத்தாலி, மலேசியா, போலிவியா,பெல்ஜியம் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய 22 நாடுகளின் பிரதிநிதிகள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. காஷ்மீரின் மாநில […]
Read Moreஇந்திய பெருங்கடல் பகுதியில் சோமாலிய கடற்கரையோரம் அமெரிக்க கடற்படையின் யு.எஸ்.எஸ். வின்ஸ்டன் நாசகாரி போர்க்கப்பல் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தது. அப்போது இரண்டு அடையாளம் தெரியாத படகுகள் சோமாலியாவை நோக்கி பயணித்து கொண்டிருந்தன. சந்தேகத்துக்கு இடமான அந்த படகுகளை வழிமறித்த அமெரிக்க கடற்படை இரண்டு படகுகளையும் சோதனையிட்டது. அப்போது அவற்றில் ஆயிரக்கணக்கான ஏகே47 துப்பாக்கிகள், இலகுரக இயந்திர துப்பாக்கிகள் மற்றும் ஆர்.பி.ஜிக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து விசாரணையில் ஏமனில் இருந்து இந்த ஆயுதங்கள் சோமாலியாவுக்கு […]
Read Moreபாக் ராணுவ வீரர்கள் மீது அடுத்தடுத்த தாக்குதல்கள், பலத்த சேதம் !! பாகிஸ்தானின் தெற்கு வசீரிஸ்தான் பகுதியில் உள்ள வனா பைபாஸ் ரோடு பகுதியில் நடத்தப்பட்ட கண்ணிவெடி தாக்குதலில் 3 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு மூன்று நாட்கள் முன்னர் இதே பகுதியில் நான்கு பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் நேற்றைய தினமே பலூச்சிஸ்தான் மாகாணத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 1 பாக் ராணுவ வீரர் உயிரிழந்துள்ளார்.
Read Moreபாங்காங் ஸோ ஏரி அருகே கட்டிய ஜெட்டி மற்றும் ஹெலிபேடை அகற்றும் சீனா !! கிழக்கு லடாக்கில் ஒரு வருட காலமாக நடைபெற்று வந்த மோதல் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. இந்திய மற்றும் சீன ராணுவங்கள் தங்களது தளவாடங்கள் மற்றும் வீரர்களை விலக்கி கொள்ள தொடங்கியுள்ளனர். அந்த வகையில் பாங்காங் ஸோ ஏரியின் வடக்கு கரை பகுதியில் ரோந்து படகுகளை நிறுத்த பயன்படும் ஜெட்டி மற்றும் ஒர் ஹெலிபேட் ஆகியவற்றை சீனா அகற்றி வருகிறது. மேலும் […]
Read More