156 இந்திய ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதிக்கு தயார் !!

  • Tamil Defense
  • February 4, 2021
  • Comments Off on 156 இந்திய ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதிக்கு தயார் !!

இந்தியா தயாரித்த போர் விமானங்கள், டாங்கிகள், பிரங்கிகள், ஏவுகணைகள் உள்ளிட்ட 156 ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதிக்கு தயார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

19 ஏரோநாடிக்கல் அமைப்புகள், 41 ஆயத மற்றும் சண்டை அமைப்புகள், 4 ஏவுகணை அமைப்புகள், 10 உயிர் பாதுகாப்பு அமைப்புகள், 27 மின்னனு மற்றும் தொலைத்தொடர்பு அமைப்புகள், 28 கடற்படை அமைப்புகள், 4 நூன் மின்னனு கருவிகள், 16 அணு உயிரி வேதியியல் அமைப்புகள் மற்றும் இதர 7 அமைப்புகள. இந்த பட்டியலில் அடங்கும்.

அஸ்திரா, நாக், பிரம்மாஸ், ஆகாஷ் போன்ற ஏவகணைகளும்

தேஜாஸ் போர் விமானம், அர்ஜூன் மார்க் 1ஏ டாங்கி, பினாகா பல்குழல் ராக்கெட் அமைப்பு, ஏடாக்ஸ் பிரங்கி ஆகியவை இந்த பட்டியலில் பிரதான இடம் வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.