
அர்ஜீன் டேங்க் மற்றும் கவச வாகன அப்கிரேடு என சுமார் 13700கோடிகள் அளவிலான ஒப்பந்தங்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
அர்ஜீன் மார்க்1ஏ நமது சென்னை ஆவடியில் தயாரிக்கப்படும்.8380கோடிகளுக்கு 118 டேங்குகள் பெறப்பட உள்ளது.தற்போது சேவையில் உள்ள கவச சண்டையிடும் வாகனங்களின் பாதுகாப்பு தரத்தை உயர்த்த 3000 கோடிகள் ஒப்பந்தத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது தவிர நாக் ஏவுகணை வைத்து ஏவக்கூடிய நமிகா கேரியர்கள் பெறும் ஒப்பந்தத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.தவிர ஆறு ஆருத்ரா நடுத்தர ஆற்றல் ரேடார் வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.