Day: February 11, 2021

பாகிஸ்தான் ராணுவத்திற்கு கொரோனா தடுப்பூசி வழங்கிய சீன ராணுவம் !!

February 11, 2021

பாகிஸ்தான் ராணுவத்திற்கு கொரோனா தடுப்பூசிகளை சீன ராணுவம் வழங்கி உள்ளது, ஆனால் எத்தனை எனும் தகவல் வெளியாகவில்லை. சீன ராணுவத்திடம் இருந்து கொரோனா தடுப்பூசிகளை பெறும் முதல் வெளிநாட்டு ராணுவம் பாகிஸ்தான் ராணுவம் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து கம்போடிய நாட்டு ராணுவத்திற்கும் கொரோனா தடுப்பூசிகளை சீன ராணுவம் வழங்கி உள்ளது. கடந்த சில நாட்கள் முன்னர் தான் சுமார் 5,00,000 கொரோனா தடுப்பூசிகளை சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் பெற்று கொண்டது குறிப்பிடத்தக்கது.

Read More

2022 ஏப்ரலில் அனைத்து ரஃபேல் விமானங்களும் இந்தியா வரும்: பாதுகாப்பு அமைச்சர் !!

February 11, 2021

நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தற்போது வரை சுமார் 11 ரஃபேல் விமானங்கள் இந்தியா வந்துள்ளதாகவும் மார்ச் மாதம் மேலும் 6 விமானங்கள் இந்தியா வரும் எனவும், 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வாக்கில் 36 ரஃபேல் போர் விமானங்களும் இந்திய விமானப்படையில் இணையும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் பேசுகையில் அனைத்து புதிய தளவாடங்களும் தகுந்த முறையில் இணைக்கப்படுவதாகவும், சுதேசி தயாரிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

Read More

போர்க்கால அடிப்படையில் ஆயுத கொள்முதல் பாதுகாப்பு துறை துணை அமைச்சர் !!

February 11, 2021

பாதுகாப்பு துறை துணை அமைச்சர் ஷ்ரிபாட் நாயக் நாடாளுமன்றத்தில் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து பேசினார். அப்போது லடாக் விவகாரம் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், போர்க்கால அடிப்படையில் ஆயுத கொள்முதல் நடைபெற்று வருவதாகவும், லடாக்கிற்கு ஏற்ற சிறந்த தொழில்நுட்பம் கொண்ட தளவாடங்களை இந்திய படைகள் கொள்முதல் செய்து வருவதாகவும் அவர் கூறினார். மேலும் பேசுகையில் இருநாடுகளை சேர்ந்த சுமார் 1,00,000 வீரர்கள் லடாக் எல்லைகளில் குவிக்கப்பட்டு உள்ளதாகவும், லடாக்கில் உள்ள இந்திய வீரர்களுக்கு […]

Read More

3டி ப்ரின்டிங் மூலம் கூட்டாக என்ஜின் தயாரிக்கும் ஹெச்.ஏ.எல் மற்றும் விப்ரோ !!

February 11, 2021

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனங்களில் ஒன்றான விப்ரோவும் ஹெச்.ஏ.எல் ஆகியவை கூட்டாக இணைந்து என்ஜின் தயாரிக்க உள்ளன. இதற்கு 3டி ப்ரின்டிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது,ஏற்கனவே விப்ரோ நிறுவனம் இந்த முறையில் தயாரித்த “நாசில் வேன்” ஒன்றிற்கு செமிலாக் தரச்சான்று கிடைத்துள்ளது. இதுகுறித்து பேசிய ஹெச்.ஏ.எல் அதிகாரி அமிதாப் பாட் விப்ரோ நிறுவனத்தின் தயாரிப்பு ஹெலிகாப்டர்களில் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார். மேலும் பேசுகையில் இந்த 3டி ப்ரின்டிங் தொழில்நுட்பம் வருங்காலத்தில் மிகப்பெரிய பங்காற்றும் எனவும் அவர் கூறினார்.

Read More

அணு உயிரி மற்றும் வேதியியல் பாதுகாப்பு உடைகள் இந்திய தரத்தில் தயாரிப்பு !!

February 11, 2021

அணு உயிரி மற்றும் வேதியியல் போர்முறை மனிதகுலத்தின் முன் பெரும் எதிரியாக சவாலாக நிற்கிறது. இத்தகைய போர்முறை எண்ணற்ற உயிர்களை பலி வாங்க கூடும் என்பதில் ஐயமில்லை, அதனை தடுக்க அத்தகைய போர்முறைகளில் பல நாடுகள் கவனம் செலுத்தி வருகின்றன. அந்த வகையில் இந்தியா தனது சொந்த தரத்திலேயே அணு உயிரி மற்றும் வேதியியல் போர்முறை பாதுகாப்பு உடைகளை வடிவமைத்து உள்ளது. இதன் மூலம் இனி அமெரிக்க மற்றும் ஜெர்மானிய தொழில்நுட்பத்தை நாம் நம்ப வேண்டியது இல்லை. […]

Read More