தெஸ்பங் மற்றும் கோக்ராவில் இருந்து வெளியேறுமா சீனப்படைகள் ?

  • Tamil Defense
  • February 21, 2021
  • Comments Off on தெஸ்பங் மற்றும் கோக்ராவில் இருந்து வெளியேறுமா சீனப்படைகள் ?

பங்கோங் ஏரிபகுதியில் இருந்து சீனப்படைகள் வெளியேறிய பிறகு தற்போது தெஸ்பங் மற்றும் கோக்ரா பகுதிகளில் இருந்து சீனப்படைகள் வெளியேற்றுவது குறித்து பேச்சுவார்த்தை சனி அன்று நடைபெற்றுள்ளது.

பத்துவாது முறையாக இருநாட்டு இராணுவ அதிகாரிகளும் மோல்டோ எனும் இடத்தில் சந்தித்து பேசியுள்ளனர்.சனியன்று பத்து மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தெஸ்பங்,ஹாட் ஸ்பிரிங் மற்றும் கோக்ரா ஆகிய பகுதிகளில் இருந்து சீனப்படைகள் வெளியேற்றம் குறித்து பேசப்பட்டு வருகிறது.

பங்கோங் போலவே தெஸ்பங் மற்றும் கோக்ராவிலும் அமைதியான முறையில் படைவிலக்கம் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.