106ஆவது விமானப்படை படையணியுடன் இணைந்த அஸ்ஸாம் ரெஜிமென்ட் !!

  • Tamil Defense
  • February 16, 2021
  • Comments Off on 106ஆவது விமானப்படை படையணியுடன் இணைந்த அஸ்ஸாம் ரெஜிமென்ட் !!

நேற்று மேற்கு வங்க மாநிலம் ஹசிமாராவில் உள்ள விமானப்படை தளத்தில் அஸ்ஸாம் ரெஜிமென்ட் மற்றும் 106ஆவது விமானப்படை படையணி ஆகியவை இணைந்தன.

அஸ்ஸாம் ரெஜிமென்ட் மற்றும் அருணாச்சல் ஸ்கவுட்ஸ் ரெஜிமென்ட்டின் தலைமை அதிகாரியான லெஃப்டினன்ட் ஜெனரல் பேஹல் ராணுவம் சார்பில் கலந்து கொண்டார.

விமானப்படை சார்பில் 106ஆவது விமானப்படை படையணியின் தலைமை அதிகாரி க்ருப் கேப்டன் வருண் சலாரியா கலந்து கொண்டார்.

இருவரின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில இணைப்பு ஒப்பந்தம் கையெழுத்து ஆனது.

இத்தகைய நடவடிக்கைகள் முப்படைகளிடையே ஒருங்கிணைப்பை அதிகரிக்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.