
இந்திய பெருங்கடல் பகுதியில் சோமாலிய கடற்கரையோரம் அமெரிக்க கடற்படையின் யு.எஸ்.எஸ். வின்ஸ்டன் நாசகாரி போர்க்கப்பல் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தது.
அப்போது இரண்டு அடையாளம் தெரியாத படகுகள் சோமாலியாவை நோக்கி பயணித்து கொண்டிருந்தன.
சந்தேகத்துக்கு இடமான அந்த படகுகளை வழிமறித்த அமெரிக்க கடற்படை இரண்டு படகுகளையும் சோதனையிட்டது.
அப்போது அவற்றில் ஆயிரக்கணக்கான ஏகே47 துப்பாக்கிகள், இலகுரக இயந்திர துப்பாக்கிகள் மற்றும் ஆர்.பி.ஜிக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
இதனையடுத்து விசாரணையில் ஏமனில் இருந்து இந்த ஆயுதங்கள் சோமாலியாவுக்கு கடத்தப்பட்டது தெரிய வந்தது.