Day: February 9, 2021

ஜே.எஃப்17 விட நவீனமானது தேஜாஸ் விமானப்படை தளபதி !!

February 9, 2021

நேற்று பெங்களூர் ஏரோ இந்தியா கண்காட்சியில் செய்தியாளர்களை சந்தித்து விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் பதவ்ரியா பேசினார். அப்போது தேஜாஸ் சீனாவின் ஜே.எஃப்17 விமானத்தை விட வலிமை வாய்ந்தது, நமக்கு அதிக பலத்தை அளிக்கும் எனவும், தேஜாஸின் நவீன சென்சார்கள், ஆயுதங்கள ஆகியவை தேஜாஸ் முதலில் தாக்குதல் நடத்துவதை உறுதிப்படுத்தும் இது ஜே.எஃப்17க்கு பெரிய பின்னடைவு என்றார். மேலும் பேசுகையில் சீனா தொடர்ந்து தனது பகுதியில் தளவாடங்களை குவித்து வருவதாகவும் தெரிவித்தார்.

Read More

ராஜஸ்தானில் தொடங்கியது யுத் அப்யாஸ் போர் பயிற்சி !!

February 9, 2021

ராஜஸ்தான் மாநிலம் மஹாஜன் பயிற்சி களத்தில் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான யுத் அப்யாஸ் போர் பயிற்சி துவங்கியது. இரு நாட்டு தரைப்படைகள் இடையேயான இந்த பயிற்சியில் காலாட்படை அணிகள், கவச வாகன படையணிகள், ஹெலிகாப்டர்கள் ஆகியவை பங்கு பெற உள்ளன. பாலைவன மற்றும் நகர்ப்புற சண்டை முறைகளுக்கு இப்பயிற்சி முக்கியத்துவம் அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

சீன எல்லையில் கண்காணிப்பு அமைப்புகளை வலுப்படுத்தும் தரைப்படை !!

February 9, 2021

பாகிஸ்தானுடனான எல்லை கட்டுபாட்டு கோடு போல சீனாவுடனான கட்டுபாட்டு கோடு ரோந்து செல்வதற்கு தோதுவானது அல்ல. அங்கிருக்கும் கடின நிலப்பரப்பு, கடுமையான காலநிலை, அதிக உயரம், உள்கட்டமைப்பு வசதிகள் இல்லா நிலை ஆகியவை ரோந்து மற்றும் கண்காணிப்பை சிக்கலாக்கி வருகிறது. இந்த நிலையில் ராணுவம் இலகுரக, நடுத்தர மற்றும் கனரக ட்ரோன்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளது, இஸ்ரேலிடம் இருந்து சில ஹெரோன் ட்ரோன்களை குத்தகை அடிப்படையில் பெறவும் ராணுவம் விரும்புகிறது. இதுதவிர இந்திய நிறுவனம் ஒன்றுடன் 140கோடி […]

Read More

இந்திய நிறுவனத்தின் புதிய ஹைப்பர்சானிக் ஏவுகணை !!!

February 9, 2021

ஏரோ இந்தியா கண்காட்சியில் பல புதிய ஆயுத அமைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவை சேர்ந்த தனியார் நிறுவனமான ஹெச்.டி.என்.பி தனது ஹைப்பர்சானிக் ஏவுகணையை இங்கு காட்சிப்படுத்தி உள்ளது. ஹெச்.ஜி.வி. 202எஃப் என பெயரிடப்பட்டு உள்ள இந்த ஏவுகணை உலகில் தற்போது இருக்கும் க்ருஸ் ஏவுகணைகளை விட வேகமானது எனவும் பலிஸ்டிக் ஆயுதங்களை விட திறன்மிக்கது எனவும் தெரிவித்துள்ளது. இதனால் சுமார் 5000கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கை 20 நிமிடங்களுக்கு குறைவான நேரத்தில் தாக்க முடியும் எனவும் கடைசி […]

Read More

இஸ்ரேலுக்காக ஈரான் விஞ்ஞானியை கொலை செய்த ஈரானிய வீரர்கள் !!

February 9, 2021

ஈரானின் தலைமை அணு விஞ்ஞானி மொஹ்ஸீன் ஃபக்ரிஸாதே கடந்த வருடம் நவம்பர் மாதம் ஈரானில் கொல்லப்பட்டார். இந்த கொலையில் இஸ்ரேலின் மொசாத் அமைப்பு ஈடுபட்டதாக பரவலாக கூறப்பட்ட நிலையில் தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஈரானிய ராணுவ வீரர்கள் சிலரே இஸ்ரேலுக்காக ஃபக்ரிஸாதேவை கொன்றுள்ளனர், அதுவும் அவர்கள் முக்கிய ஈரானிய தலைவர்களை பாதுகாக்கும் பிரிவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

Read More

உயிருடன் எரிக்கப்பட்ட கடற்படை வீரர் மரணம் !!

February 9, 2021

கடற்படையில் செய்லர் ஆக பணியாற்றி வந்த சூரஜ் குமார் துபே ஜார்க்கண்ட் மாநிலம் பலாமு கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். 25 வயதான இவர் கோவையில் உள்ள ஐ.என்.எஸ். அக்ரானி கடற்படை தளத்தில் தலைமைத்துவ பண்புகள் பயிற்சி பெற்று வந்தார். இதன் பின்னர் விடுமுறைக்காக செல்லும்போது சென்னையில் கடத்தப்பட்ட அவர் மூன்று நாட்கள் சென்னையில் அடைத்து வைக்கப்பட்டதாக தெரிகிறது. பின்னர் மஹாராஷ்டிர மாநிலம் பால்கர் அருகே கோல்வாட் பகுதியில் காட்டுப்பகுதியில் உயிருடன் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் அவருக்கு […]

Read More