Day: February 7, 2021

உத்ரகண்ட் கிளாசியர் வெடிப்பு குறித்த அப்டேட்

February 7, 2021

உத்ரகண்ட் அரசிற்கு உதவ முப்படைகளும் தற்போது களத்தில் இறங்கியுள்ளன. இந்திய இராணுவம் 1.மல்லாரி ஆக்சிஸ் அருகே நான்கு குழு வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.இரு குழு வீரர்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளனர் 2.ஜேசிபிகளுடன் என்ஜினியர் டாஸ்க் படை களமிறக்கப்பட்டுள்ளது. இரு ஆம்புலன்சுகளுடன் மெடிக்கல் பிரிவு களமிறக்கப்பட்டுள்ளது. 4.மீட்பு பணிகளுக்காக இரு சீட்டா வானூர்திகள் களமிறக்கப்பட்டுள்ளன. ஜோசிமத்தில் கட்டுப்பாட்டு அறை ஒன்று தற்போது அமைக்கப்பட்டுள்ளது. விமானப்படை ஐந்து டன்கள் பொருள்களுடன் 60 NDRF வீரர்கள் சி-130 விமானம் உதவியுடன் ஜோலிகிரான்ட் விமான தளம் […]

Read More

கப்பல் எதிர்ப்பு ஏவுகணை ஏவி சோதனை செய்த ஐஎல்-38 விமானம்

February 7, 2021

கடற்படையின் கடல்சார் ரோந்து விமானம் தான் ஐஎல்-38 கடல் டிராகன் விமானம் ஆகும்.இந்த விமானம் கப்பல் எதிர்ப்பு ஏவுகணையான Kh-35E ஏவுகணையை வெற்றிகரமாக ஏவி பரிசோதனை செய்துள்ளது. ட்ரோபெக்ஸ் 21 போர்பயிற்சியின் முடிவின் போது Ilyushin-38SD ரோந்நு விமானம் Kh35E கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை ஏவியுள்ளது.இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Read More

உத்ரகண்டில் மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழு

February 7, 2021

உத்ரகண்டில் தற்போது வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இந்தோ திபத் எல்லைப் படையினர் ஏற்கனவே மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஹிண்டன் விமானப்படை தளத்தில் இருந்து இரு C-130 விமானங்கள் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்களுடன் டேராடூன் விரைந்துள்ளது.அங்கு ஜோஷிமத்தில் மி-17 மற்றும் த்ருவ் வானூர்திகள் உதவியுடன் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட இடங்களில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள மேலதிக துருவ் வானூர்திகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Read More

க்ரீஸ் விமானப்படையை கண்டு அஞ்சும் துருக்கி !!

February 7, 2021

க்ரீஸ் விமானப்படை ரஃபேல் போர் விமானங்களை இயக்கி வருகிறது, இந்த விமானங்களில் ஸ்கால்ப், மிட்டியோர், மைகா, எக்ஸோசெட் போன்ற ஏவுகணைகளை பயன்படுத்தி கொள்ள முடியும். தற்போது 18 ரஃபேல் போர் விமானங்களை க்ரீஸ் இயக்கி வருகிறது, 2025 ஆண்டில் மேலும் ஒரு தொகுதி ரஃபேல் விமானங்களை படையில் இணைக்க உள்ளது இதன் காரணமாக 40 ரஃபேல் விமானங்கள் க்ரீஸ் படையில் இருக்கும். இந்த எண்ணிக்கை மற்றும் ரஃபேலின் அதிநவீன ஏசா ரேடார், அது தவிர மிட்டியோர் ஏவுகணைகள் […]

Read More

அரசின் அனுமதிக்காக காத்திருக்கும் டாடா ஏர்பஸ் விமான தயாரிப்பு நிலையம் !!

February 7, 2021

இந்திய விமானப்படையில் உள்ள ஆவ்ரோ விமானங்களுக்கு மாற்றாக ஏர்பஸ் சி295 விமானங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. மேலும் இந்த விமானங்களை மேக் இன் இந்தியா திட்டத்தில் இந்தியாவிலேயே தயாரிக்கும் பொருட்டு ஏர்பஸ் மற்றும் டாடா நிறுவனங்கள் இணைந்துள்ளன. தற்போது கேபினட் கமிட்டியின் அனுமதிக்காக இத்திட்டம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது, அனுமதி கிடைக்கும் பட்சத்தில் உடனடியாக இதற்கான பணிகள் துவங்கும். சுமார் 15,000 கோடி ருபாய் மதிப்பில் 56 சி295 விமானங்கள் இந்திய விமானப்படைக்கு வாங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More