Breaking News

Day: February 5, 2021

தொடர்ந்து 3 மாதம் வரை பறக்கும் இந்தியாவின் புதிய இன்ஃபினிட்டி ட்ரோன் !!

February 5, 2021

அதிக உயரத்தில் பறக்கக்கூடிய ட்ரோன் ஒன்றை இந்தியா உருவாக்கி வருகிறது, அடுத்த 5 ஆண்டுகளில் ராணுவத்தில் இது சேர்க்கப்பட உள்ளது. சூரிய மின்சக்தியில் இயங்கும் இந்த ட்ரோன் சுமார் 90 நாட்கள் வரை 65,000அடி உயரத்தில் பறக்கும் திறன் படைத்தது. CATS அமைப்பின் ஒரு பகுதியான இந்த ட்ரோன் பூமியின் “அடுக்கு மண்டலம்” (STRATOSPHERE) வரை சென்று பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த அடுக்கு மண்டலம் தான் அடுத்து ட்ரோன்கள் பயன்படுத்தும் பகுதியாக இருக்கும் அதற்கான […]

Read More

செஷல்ஸ் நாட்டிற்கு அதிவேக ரோந்து கலன் ஏற்றுமதி !!

February 5, 2021

கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் கப்பல் கட்டுமான நிறுவனம் செஷல்ஸ் நாட்டுடன் ஒப்பந்தம் செய்து உள்ளது. அதன்படி செஷல்ஸ் நாட்டு கடலோர காவல்படைக்கு ஒரு அதிவேக ரோந்து கலனை கட்டி கொடுக்க வேண்டும். இந்த கலன் வாட்டர் ஜெட் ப்ரோப்பல்ஷன் உடன் மணிக்கு 34 நாட்ஸ் வேகத்தில் செல்லும் திறன் கொண்டதாகவும் சுமார் 1500 நாட்டிக்கல் மைல் தொலைவு கொண்டதாகவும் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த கலன் கடத்தல் தடுப்பு, கடல்சார் பாதுகாப்பு, கடல்சார் […]

Read More

தேஜாஸ் போர் விமானத்தில் பறந்த வங்கதேச விமானப்படை தளபதி !!

February 5, 2021

ஏரோ இந்தியா கண்காட்சிக்கு வந்துள்ள வங்கதேச விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் மஷிஹுசமான் செர்னியாபாட் தலைமையில் வங்கதேச விமானப்படை குழு வந்துள்ளது. இன்று அவர் நமது சொந்த தயாரிப்பான தேஜாஸ் இலகுரக போர் விமானத்தில் பறந்தார். விரைவில் தென்கிழக்கு ஆசிய நாடு ஒன்றுக்கு தேஜாஸ் ஏற்றுமதி செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Read More

பிரம்மாஸ் ஏவுகணையை பார்வையிட்ட ஈரான் பாதுகாப்பு அமைச்சர் !!

February 5, 2021

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஏலகங்கா படைதளத்தில் ஏரோ இந்தியா கண்காட்சி நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் இந்த கண்காட்சியை ஈரானிய பாதுகாப்பு அமைச்சர் ப்ரிகேடியர் ஜெனரல் அமீர் ஹத்தாமி பார்வையிட்டார். அப்போது பிரம்மாஸ் ஏவுகணையின் கடல்சார் வடிவத்தை பார்வையிட்ட அவர் ஈரானிய கடற்படைக்கு அதனை வாங்க விருப்பம் காட்டினார். பின்னர் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் இதர விஷயங்களை குறித்து பேசினார்.

Read More

சீனாவுக்கு கவலை ஏற்படுத்தி உள்ள ரஃபேல் விமானப்படை தளபதி பேட்டி !!

February 5, 2021

இந்திய விமானப்படையில் ரஃபேல் போர் விமானங்கள் இணைக்கப்பட்டது சீனாவுக்கு கவலை ஏற்படுத்தி உள்ளதாக விமானப்படை தளபதி தெரிவித்துள்ளார். மேலும் ரஃபேல் விமானங்கள் இணைக்கப்பட்டதின் எதிரொலியாக சீனா தனது ஜே31 விமானங்களை இந்திய எல்லையோரம் நிறுத்தி உள்ளது. தற்போது பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன, படைகளை விலக்கக்கூடிய நிலை வந்தால் அது வரவேற்கத்தக்கது. ஆனால் நிலைமை மோசமானால் எந்த சவாலையும் எதிர்கொள்ள இந்திய விமானப்படை தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

Read More

பாகிஸ்தானில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்திய ஈரான் !!

February 5, 2021

நேற்று பாகிஸ்தானில் ஈரான் ராணுவம் சர்ஜிக்கல் தாக்குதலை நடத்தி உள்ளது. பாகிஸ்தான் ஈரான் எல்லையோரம் உள்ள சிஸ்தான் பகுதியில் இருந்து ஜெய்ஷ் அல் அதல் எனும் பயங்கரவாத குழு 11 ஈரானிய வீரர்களை கடந்த 2018ஆம் ஆண்டு கடத்தியது. பாகிஸ்தானிய சிறைகளில் அடைக்கப்பட்டு இருந்த அவர்களில் 5 பேர் அதே வருடம் விடுவிக்கப்ட்டனர், 4 பேர் 2019ஆம் வருடம் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் 2 பேர் விடுவிக்கப்படாத நிலையில் ஈரான் ராணுவம் சர்ஜிக்கல் தாக்குதலை நடத்தி அவர்களை […]

Read More

இந்திய கடற்படைக்கு ஹெலிகாப்டர்கள் வழங்க ஏர்பஸ் நிறுவனம் விருப்பம் !!

February 5, 2021

இந்திய கடற்படை ஏற்கனவே சுமார் 3 பில்லியன் டாலர்கள் மதிப்பில் 111 ஹெலிகாப்டர்கள் வாங்க முயற்சி செய்து வருகிறது. இந்த நிலையில் ஏர்பஸ் ( Airbus) நிறுவனம் தனது பேந்தர் ரக (Panther helicopter) ஹெலிகாப்டர்களை குத்தகை முறையில் இந்திய கடற்படைக்கு வழங்க விருப்பம் தெரிவித்து உள்ளது. இதை பற்றி பேசிய ஏர்பஸ் இந்தியாவின் தலைவர் ரெமி மைலார்ட் ” பல நாடுகள் ஏற்கனவே குத்தகை அடிப்படையில் தளவாடங்களை பெற்று இயக்கி வருகின்றன, ஆகவே இந்தியாவுக்கு வழங்கவும் […]

Read More

2 ரெஜிமென்ட் அர்ஜூன் டாங்கிகள் வாங்க தரைப்படை முடிவு !!

February 5, 2021

இந்திய தரைப்படை சுமார் இரண்டு ரெஜிமென்ட் டாங்கிகளை வாங்க முடிவு செய்துள்ளது இதற்காக அர்ஜூன் மார்க்1ஏ டாங்கி தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த அர்ஜூன் மார்க் 1ஏ டாங்கிகள் சுமார் 71 மேம்படுத்தல்களை உள்ளடக்கியது ஆகும். இந்த டாங்கிகளை ராஜஸ்தான் தார் பாலைவனத்தில் தரைப்படை பயன்படுத்தி கொள்ள முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு ரெஜிமென்ட் டாங்கிகளுக்கான ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 8956 கோடிகள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More