Day: February 2, 2021

எல்லையில் அதிநவீன டாங்கிகளை குவிக்கும் சீனா !!

February 2, 2021

இந்தியாவுடனான எல்லையோரம் சீனா தனது அதிநவீன டாங்கிகளை குவித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 350 டைப்99 ரக டாங்கிகளை சீனா குவித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே நேரத்தில் எல்லை நிலவரம் இருநாட்டு உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்த கூடாது என சீன வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். ஏறத்தாழ ஒரு வருட காலமாக லடாக்கில் இந்திய மற்றும் சீன படைகள் குவிந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

மியான்மர் மீது பொருளாதார தடை அமெரிக்கா எச்சரிக்கை !!

February 2, 2021

நேற்று மியான்மர் ராணுவம் தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக கூறி ஆட்சியை கைபற்றியது. இதனையடுத்து சர்வதேச அளவில் கண்டனங்கள் மியான்மர் ராணுவத்துக்கு எதிராக குவிந்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உலகில் ஜனநாயகம் எங்கு பாதிக்கப்பட்டாலும் அமெரிக்கா குரல் கொடுக்கும் என அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் மியான்மர் மீது பொருளாதார தடைகள் வேண்டும் விதிப்பது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாகவும் வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Read More

பைடன் நிர்வாகம் பொறுப்பேற்ற பின் இந்தியா அமெரிக்கா இடையிலான முதல் போர் பயிற்சி !!

February 2, 2021

அமெரிக்காவில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் பொறுப்பேற்ற பின்னர் இந்தியா அமெரிக்கா இடையிலான முதல் போர் பயிற்சி நடைபெற உள்ளது. அடுத்த மாதம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மஹாஜன் பயிற்சி களத்தில் யுத் அப்யாஸ் போர் பயிற்சி துவங்க உள்ளது. இதில் இந்தியா சார்பில் ஜம்மு காஷ்மீர் லைட் இன்ஃபான்ட்ரி மற்றும் அமெரிக்கா சார்பில் ஸ்ட்ரைக்கர் சண்டை படையணி ஆகியவை பங்கேற்க உள்ளன. கவச வாகனங்கள், தாக்குதல் ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றை கொண்டு பாலைவனம் மற்றும் நகர்ப்புற […]

Read More

டாடா வடிவமைக்கும் முதல் விமானம் !!

February 2, 2021

டாடா குழுமத்தின் ஒரு பிரிவான டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் ஜெர்மானிய விமானமான “க்ராப் 180 ஜி.என்” உடைய தயாரிப்பு உரிமத்தை வாங்கியுள்ளது. தற்போது இந்த விமானத்தை உளவு மற்றும் கண்காணிப்பு விமானமாக மாற்றி ஜெர்மனியில் சோதனை செய்து வருகிறது. சுமார் 45000 அடி உயரம் வரை பறக்கும் திறன் கொண்ட இது இரட்டை என்ஜின் விமானம் ஆகும். புல்தரை மற்றும் க்ராவல் தரைகளிலும் இதனால் தரை கறங்க முடியும் என கூறப்படுகிறது. இது சிக்னல் இன்டலிஜென்ஸ் […]

Read More

தேஜாஸ் பல வகைகளில் சிறந்தது பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் !!

February 2, 2021

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது தேஜாஸ் விமானம் குறிப்பிட்ட சில பகுதிகளில் வெளிநாட்டு விமானங்களை விட திறன் வாய்ந்ததாக இருப்பதாக கூறினார். அதாவது என்ஜின், ரேடார், வானிலேயே எரிபொருள் நிரப்பும் வசதி, BVR ஏவுகணைகள் என அதன் வகுப்பில் உள்ள வெளிநாட்டு விமானங்களை விடவும் சிறப்பு வாய்ந்தது என கூறியுள்ளார். தேஜாஸ் போர் விமானத்தை வாங்க இந்திய விமானப்படை ஒப்புதல் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More

இந்தியாவின் புதிய வாரியர் ட்ரோன் ஒரு பார்வை !!

February 2, 2021

இந்தியா தற்போது வாரியர் எனும் ஆளில்லா ட்ரோனை உருவாக்கி வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த வாரியர் ட்ரோன் கேட்ஸ் எனப்படும் அமைப்பின் அங்கமாகும், இந்த அமைப்பில் பல்வேறு வகையான ஏவுகணைகளும் அடக்கம். இந்த வாரியர் ட்ரோனை தேஜாஸ் விமானம் மூலமாக கட்டுபடுத்த முடியும், அதாவது ஒரே நேரத்தில் பல்வேறு வாரியர் ட்ரோன்களை ஒரு தேஜாஸ் விமானி கட்டுபடுத்த முடியும். இந்த ட்ரோன்கள் இரட்டை என்ஜின் மற்றும் ஸ்டெல்த் அம்சங்கள் கொண்டவை மேலும் இவை வானிலிருந்து வான் இலக்கு […]

Read More