
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள லெல்ஹார் பகுதியில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்திற்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அப்பகுதியை சுற்றி வளைத்த ராணுவ வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் நிகில் டேய்மா என்ற வீரர் வீரமரணம் அடைந்தார்.
19 வயதே நிரம்பிய இந்த வீரர் ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் பகுதியை சேர்ந்தவர் ஆவார்.