இந்தியா சமீப காலமாக தனது ஆயுத தேவையை உள்நாட்டு தயாரிப்புகளை கொண்டு பூர்த்தி செய்வதிலும், அந்த தளவாடங்களை ஏற்றுமதி செய்வதிலும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது.
இந்த நிலையில் மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகம் பிரம்மாஸ் மற்றும் ஆகாஷ் ஏவுகணைகளை ஏற்றுமதி செய்வதற்கான நாடுகளின் பட்டியலை தயாரித்து உள்ளது.
பிரம்மாஸ்:
ஃபிலிப்பைன்ஸ் மிக நீண்ட காலமாகவே ஆர்வம் காட்டி வந்த நிலையில் விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. அதை தவிர
இந்தோனேசியா
வியட்நாம்
ஐக்கிய அரபு அமீரகம்
சவுதி அரேபியா
தென் ஆஃப்ரிக்கா
ஆகிய நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன.
ஆகாஷ்:
ஒன்பது நாடுகள் ஆகாஷ் ஏவுகணையை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றன, அவை;
கென்யா
ஃபிலிப்பைன்ஸ்
இந்தோனேசியா
ஐக்கிய அரபு அமீரகம்
பஹ்ரைன்
சவுதி அரேபியா
எகிப்து
வியட்நாம்
அல்ஜீரியா