இந்திய விமானப்படை அதிகாரியான ஃப்ளைட் லெஃப்டினன்ட் ஸ்வாதி ராத்தோர் Mi17v5 ஹெலிகாப்டர் விமானி ஆவார்.
வரும் 26ஆம் தேதி குடியரசு தின விழாவில் பறக்கும் விமானப்படை அணியை வழிநடத்தும் முதல் பெண் அதிகாரி என்ற பெருமை இவரை சாரும்.
சிறு வயது முதலே விமானி ஆக வேண்டும் என்ற கனவை கொண்டிருந்தார் ஸ்வாதி.
முன்னாள் தேசிய மாணவர் படை உறுப்பினரான அவர் 2014ஆம் ஆண்டு விமானப்படையில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.