தலைநகர் தில்லியில் செய்தியாளர்களுடன் பேசிய ஜெனரல் நரவாணே தரைப்படையில் இனி ஹெலிகாப்டர் விமானிகளாக பெண்களும் இணையலாம் என்றார்.
அதாவது தரைப்படையின் ஏவியேஷன் கோர் படையில் தற்போது பெண் அதிகாரிகள் தரை கட்டுபாட்டு பிரிவில் பணியாற்றி வருகின்றனர்.
கூடிய விரைவில் பெண் அதிகாரிகள் ஹெலிகாப்டர் விமானிகளாகவும் இணையலாம் என அவர் தெரிவித்தார்.
இந்த வருடம் ஜூலை மாதம் இவர்கள் விமானிகளாக தேர்வு செய்யப்பட்டு பின்னர் பயிற்சி முடித்த பின் விமானிகளாக தங்களது பணியை தொடங்குவர்.
தற்போது இந்திய விமானப்படையில் 10 பெண் போர் விமானிகளும், 111 பெண் ஹெலிகாப்டர்கள் மற்றும் போக்குவரத்து விமானிகளும் உள்ளனர்.
இந்திய கடற்படையில் டோர்னியர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை இயக்கும் பெண் விமானிகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.