முக்கிய இந்திய விஞ்ஞானியின் உடலில் ஆர்சனிக் விஷம் கொலை முயற்சியா ?? இந்திய விஞ்ஞானிகளின் மர்மமான மரணங்கள் !!

  • Tamil Defense
  • January 6, 2021
  • Comments Off on முக்கிய இந்திய விஞ்ஞானியின் உடலில் ஆர்சனிக் விஷம் கொலை முயற்சியா ?? இந்திய விஞ்ஞானிகளின் மர்மமான மரணங்கள் !!

முக்கிய இஸ்ரோ விஞ்ஞானியான தபன் மிஸ்ரா சமீபத்தில் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தன்னை கொல்ல முயற்சி நடப்பதாக கூறியுள்ளார்.

அதாவது திடீரென உடல்நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவரது உடலில் ஆர்சனிக் எனும் வேதி பொருள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக சுமார் 2 வருடங்கள் சிகிச்சையில் கழித்துள்ளார்.

இந்த பதிவு பல இந்திய விஞ்ஞானிகளின் மர்மமான மரணங்கள் மீதான கேள்வியை எழுப்புகிறது.

அணுசக்தி, விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானிகள் அதிகம் குறிவைக்கப்படுகின்றனர். விக்ரம் சாராபாய், ஹோமி பாபா போன்றோரின் மரணங்கள் நமக்கு பேரிழப்பு.

அதை போல விஞ்ஞானி நம்பி நாராயணனின் பொய்வழக்கு மற்றும் அதன் அடிப்படையிலான கைது ஆகியவையும் கேள்வி கேட்கப்பட வேண்டியவை ஆகும்.