போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ள இந்திய தரைப்படையின் மேற்கு கட்டளையகம் !!

  • Tamil Defense
  • January 7, 2021
  • Comments Off on போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ள இந்திய தரைப்படையின் மேற்கு கட்டளையகம் !!

இந்திய தரைப்படையின் மேற்கு கட்டளையகம் ஹரியானா மாநிலம் சண்டிமன்டிரை தலைமை இடமாக கொண்டு இயங்கி வருகிறது.

இந்த கட்டளையகம் கடந்த சில நாட்களாக பனிக்கால பயிற்சி சுழற்சி முறையில் போர் ஒத்திகையில் ஈடுபட்டு உள்ளது.

இதில் தரைப்படையின் மிகுந்த ஆற்றல் மிக்க தாக்குதல் படைப்பிரிவான “கார்கா கோர் அதாவது 2ஆவது தாக்குதல் கோர் ” பிரிவும் பங்கேற்று உள்ளது.

இந்திய துணை கண்டத்தில் நிலவும் மோசமான பாதுகாப்பு சூழலின் போது இப்பயிற்சி மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.