
அமெரிக்காவில் ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் பொறுப்பேற்றதை அடுத்து, அடுத்த பாதுகாப்பு செயலராக ஜெனரல் லாய்டு ஜே ஆஸ்டின் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளார்.
இவர் பாதுகாப்பு செயலர் தேர்வுக்கான செனட் கமிட்டி முன்பு ஆஜராகி பேசினார்.
அப்போது அமேரிக்க பாகிஸ்தான் உறவு மிக முக்கியமானது குறிப்பாக ஆஃப்கன் சமாதானத்திற்கு தேவையானது எனவும்,
வருங்கால பாகிஸ்தான் ராணுவ தலைவர்களை சர்வதேச ராணுவ கல்வி மற்றும் நிதியுதவி பயன்படுத்தி பயிற்றுவிக்க விரும்புவதாகவும், அல் காய்தா மற்றும் ஐ.எஸ் இயக்கங்களை வீழ்த்த பாக் உதவி தேவைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் லஷ்கர் மற்றும் ஜெய்ஷ் இயக்கங்களை கண்டித்து பேசியுள்ளார் ஆனால் கடந்த காலங்களை போல் இந்த பக்கம் கண்டித்து பேசிவிட்டு அந்த பக்கம் தட்டி கொடுக்கும் செயலாக மாறுமா என்பது பிரதான கேள்வியாக உள்ளது.