தில்லி குண்டுவெடிப்பில் பயன்படுத்தபட்ட வெடிமருந்து வகை கண்டுபிடிப்பு !!

2 தினங்கள் முன்னர் தில்லியில் இஸ்ரேலிய தூதரகம் முன்னர் நடைபெற்ற குண்டுவெடிப்பு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இதற்கு பயன்படுத்தபட்ட வெடிமருந்து ராணுவ தரத்திலான பென்டாஎரித்ரிடால் டெட்ராநைட்ரேட் என தெரிய வந்துள்ளது.

இந்த வகை வெடிமருந்து பெரும்பாலும் அல் காய்தா அமைப்பு பயன்படுத்த கூடியது ஆகும்.

மேலும் ட்ரான்ஸிஸ்டர்களுக்கான ஹைவாட் 9 வோல்ட் பேட்டரியும் கண்டு பிடிக்க பட்டுள்ளது, இவை வழக்கமாக இந்தியன் மூஜாஹீதின் மற்றும் லஷ்கர் இ தொய்பா ஆகிய அமைப்புகளால் பயன்படுத்தி வரப்படுபவை ஆகும்.