மும்பை கடற்படை தளம் இந்திய கடற்படையின் மேற்கு கட்டளையக தலைமையகமாக செயல்பட்டு வருகிறது.
இங்கு ஐ.என்.எஸ் பெட்வா போர்க்கப்பலில் பணியாற்றி வந்த 22 வயதான வீரர் ரமேஷ் சவுதரி இறந்த நிலையில் காணப்பட்டார்.
அவர் தலையில் குண்டு பாய்ந்த நிலையில் அருகே துப்பாக்கியும் இருந்தது,
மேலும் அவரது சகா கூறுகையில் அன்று காலை முதலே ரமேஷ் வருகை பதிவேட்டில் கையெழுத்து இட வரவில்லை என்றார்.
ஆகவே அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.