தில்லி குண்டுவெடிப்பு: 2 ஈரானியர்கள் கைது; விசாரணைக்கு வரும் இஸ்ரேல் அதிகாரிகள் !!

தில்லியில் இஸ்ரேலிய தூதகரம் அருகே நடைபெற்ற குண்டுவெடிப்பு தற்போது மி தீவிரமாக பார்க்கப்பட்டு வருகிறது.

விசாரணை நடைபெற்று வந்த நிலையில் ஜெய்ஷ் அல் ஹிந்த் எனும் இயக்கம் இதற்கு பொறுப்பேற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் குண்டுவெடிப்புக்கு காரணமானவர்கள் என சந்தேகிக்கப்படும் இரண்டு ஈரானியர்கள் விசாரணையில உள்ளனர்.

மேலும் கூடுதலாக இஸ்ரேலிய அதிகாரிகள் இந்தியா வந்து விசாரணையில் தேசிய பாதுகாப்பு முகமையுடன் இணைந்து பணியாற்ற உள்ளனர்.

இஸ்ரேல் ஏற்கனவே ஈரானின் கைங்கர்யம் இதற்கு பின்னால் இருப்பதாக சந்தேகிப்பது குறிப்பிடத்தக்கது.