
TEDBF எனப்படும் இரட்டை என்ஜின் கடற்படை போர்விமானம் 2026ஆம் ஆண்டு முதல் பறக்கும் சோதனையில் ஈடுபடுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வகை போர் விமானங்கள் சுமார் 26டன்கள் சுமைதிறன் கொண்டு இருக்கும்.மேலும் தற்போது பயன்பாட்டில் உள்ள மிக்29 விமானங்களுக்கு மாற்றாக விக்ரமாதித்யா மற்றும் விக்ராந்த் விமானந்தாங்கி கப்பல்களில் இருந்து இயங்கும் என கூறப்படுகிறது.