இந்தியா வந்தடைந்தது மேலும் மூன்று ரபேல் விமானங்கள்
1 min read

இந்தியா வந்தடைந்தது மேலும் மூன்று ரபேல் விமானங்கள்

மேலதிக மூன்று ரபேல் விமானங்கள் சற்று நேரத்திற்கு முன்பு இந்தியா வந்தடைந்துள்ளன.சுமார் 7000கிமீ பறந்து தற்போது அவை இந்தியா வந்தடைந்துள்ளன.

இந்தியா தற்போது வந்துள்ளது மூன்றாம் தொகுதி மூன்று ரபேல் விமானங்கள் ஆகும்.ஏற்கனவே இரண்டு தொகுதி விமானங்கள் இந்தியா வந்து அவை விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ளது.

பிரான்சின் ஸ்ட்ரெஸ் விமானப்படை தளத்தில் இருந்து கிளம்பிய மூன்று ரபேல் விமானங்களும் சற்று முன்பு இந்திய விமானப்படை தளத்தில் தரையிறங்கியுள்ளன.

இடையிலேயே நமது ரபேல் விமானங்களுக்கு ஐக்கிய அரபு அமீரக டேங்கர் விமானம் வானிலேயே எரிபொருள் நிரப்பியது குறிப்பிடத்தக்கது ஆகும்.இதற்கு விமானப்படை சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.