நேற்று அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள முன்னனி விமானப்படை தளமான தேஸ்பூர் தளத்தின் புதிய கட்டளை அதிகாரியாக ஏர் கமோடர் தர்மேந்திர சிங் தாங்கி பொறுப்பேற்று கொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் தேஸ்பூர் தளம் கிழக்கு எல்லையில் எவ்வித சவாலையும் சமாளிக்க தயாராக இருப்பதாக கூறினார்.
ஏர் கமோடர் தர்மேந்திர சிங் டைகர் மோத், மிக்21, மிக்27 மற்றும் சுகோய்30 ஆகிய விமானங்களில் விபத்தின்றி சுமார் 3000 மணிநேரம் பறந்த அனுபவம் மிக்இ அதிகாரி ஆவார்.
மேலும் 2009 முதல் 2011 வரை சுமார் 3 ஆண்டுகள் தேஸ்பூர் தளத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ளதாகவும் தெரிவித்தார்.