இரட்டை கோபுர தாக்குதல் என்பது உலகை உலுக்கிய ஒரு பயங்கர நிகழ்வு அதன் பாதிப்பு இன்றளவும் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
தற்போது ஈரானிய ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுவான “வாத் அல் ஹக்” புர்ஜ் கலிஃபா கட்டிடத்தை தகர்க்க மிரட்டல் விடுத்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள படத்தில் இரண்டு ட்ரோன்களை புர்ஜ் கலிஃபா கட்டிடம் மீது மோதி வெடிக்க செய்யும் காட்சி உள்ளது.
இந்த மிரட்டல் மத்திய கிழக்கில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியா ஆகிய.நாடுகள் ஈரானுக்கு எதிரானவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இதே குழு ட்ரோன்கள் மூலமாக சவுதி அரேபிய எண்ணெய் கிடங்குகள் மீது தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது ஆகும்.