காஷ்மீர் மாநிலம் அவந்திபோராவில் சந்தாரா கிராமத்தில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளின் பதுங்குமிடம் பற்றிய தகவல் பாதுகாப்பு படையினருக்கு கிடைத்தது.
இதனையடுத்து 50ஆவது ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ், 110ஆவது மத்திய ரிசர்வ் காவல்படை பட்டாலியன் ஆகியவை செயலில் இறங்கின.
அப்போது 10×5×5 அடிகள் அளவு கொண்ட பதுங்குமிடம் கண்டுபிடிக்க பட்டது. இதன் மேற்புறத்தில் ஒரு மூடி இருந்தது பின்னர் ஆறடி தூரத்துக்கு ஒரு சுரங்கமும் இருந்தது.
அங்கிருந்து லஷ்கர் இ தொய்பா தொடர்பான பொருட்கள் ஏகே47 தோட்டாக்கள் ஆகியவை கைப்பற்ற பட்டன.