1 min read
பயங்கரவாதிகள் தாக்குதலில் இராணுவ வீரர் வீரமரணம்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த தாக்குதலில் மூன்று வீரர்கள் காயமடைந்துள்ளனர்.ஒரு வீரர் வீரமரணம் அடைந்துள்ளார்.
ஷம்ஸிபோரா பகுதியில் உள்ள சுபன்போராவில் ராணுவத்தினர் சோதனை நடத்தி கொண்டிருந்த வேளையில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.
அதாவது ராணுவ கான்வாய் செல்லும் முன் சாலைகளில் வெடிகுண்டு உள்ளிட்டவற்றவை வைக்கப்பட்டு இருக்கிறதா என சோதனை நடத்தப்படும் அந்த பணியை வீரர்கள் மேற்கொண்டு இருந்தனர்.
அப்போது பயங்கரவாதிகள் ராணுவ வீரர்கள் மீது கையெறி வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.
இதில் 24ஆவது ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் படையணியை சேர்ந்த 3 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.காயமடைந்த வீரர்கள் 92வது தள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.