
மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சுமார் 1.8 லட்சம் அதிநவீன குண்டு துளைக்காத பாதுகாப்பு கவசங்களை தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தத்தை எஸ்.எம்.பி.பி நிறுவனத்திற்கு வழங்கி இருந்தது.
இந்த நிலையில் எஸ்.எம்.பி.பி நிறுவனம் சுமார் 1 லட்சம் குண்டு துளைக்காத கவசங்களை முதல் தொகுதியாக நான்கு மாதங்கள் முன்னரே டெலிவரி செய்ய துவங்கி உள்ளது.
இந்த கவசங்கள் மிகவும் ஆபத்தான ஏகே47ன் ஸ்டீல் கோர் புல்லட்களை தடுத்து நிறுத்தும் ஆற்றல் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.