காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஒழிக்கும் ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் பற்றிய சிறப்பு பதிவு !!

  • Tamil Defense
  • January 4, 2021
  • Comments Off on காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஒழிக்கும் ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் பற்றிய சிறப்பு பதிவு !!

காஷ்மீரில் 25 ஆண்டு காலமாக பயங்கரவாத ஒழிப்பில் சிறப்பாக ஈடுபட்டு வரும் ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் அதன் பணியை வெற்றிகரமாக செய்து வருகிறது.

1990களில் காஷ்மீரில் பயங்கரவாதம் பெருகிய போது காவல்துறை கட்டுபடுத்த முடியாமல் திணற அப்போதைய பிரதமர் வி பி சிங் தலைமையிலான அரசு புதிய படைப்பிரிவை உருவாக்க ஒப்புதல் அளித்தது.

உடனடியாக இந்திய தரைப்படை காஷ்மீரில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த 5000 வீரர்களை கொண்ட படையாக ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸை தோற்றுவித்தது.

ஆரம்பத்தில் சில சறுக்கல்கள் ஏற்பட விரிவான ஆய்வுக்கு பின்னர் இந்திய தரைப்படை ஒவ்வொரு காலாட்படை ரெஜிமென்ட்டில் இருந்தும் 2 பட்டாலியன்களை ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் பிரிவுக்கு அனுப்பியது.

ராஷ்ட்ரிய ரைபிள்ஸில் 50% வீரர்கள் காலாட்படையில் இருந்தும், 10% சேவைகள் பிரிவில் இருந்தும், 40% மற்ற பிரிவுகளில் இருந்தும் உள்ளனர்.

ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸிற்கு தேர்வு செய்யப்படும் அனைத்து வீரர்களும் கோர்ப்ஸ் பேட்டல் ஸ்கூல் எனப்படும் பயிற்சி மையங்களுக்கு சென்று சில வார காலம் அதி தீவிர பயிற்சிகளை மேற்கொள்கின்றனர்.

ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் ஏகே ரக துப்பாக்கிகளை மட்டுமே பிரதானமாக பயன்படுத்தி வருகிறது என்பது சிறப்பு மிக்க தகவல்,

மேலும் கடந்த 25 ஆண்டுகாலத்தில் 21,000க்கும் அதிகமான பயங்கரவாதிகளை ஒழித்துள்ளது, 8000க்கும் அதிகமான பயங்கரவாதிகள் சரண் அடைந்துள்ளனர்.

இது தவிர ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் படைப்பிரிவு பல் வேறு மருத்துவ, கல்வி ரிதியான மனிதநேய உதவிகளை செய்து வருகிறது.

இன்று வரை ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் வீரர்கள் 6 அஷோக சக்ரா, 34 கீர்த்தி சக்ரா, 221 ஷவ்ரிய சக்ரா மற்றும் 1508 சேனா மெடல்களை பெற்று அப்படைக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.