புதிய தொழில்நுட்பங்களை வடிவமைக்க விஞ்ஞானிகள உழைக்க வேண்டும் – டி ஆர் டி ஒ தலைவர் !!

  • Tamil Defense
  • January 2, 2021
  • Comments Off on புதிய தொழில்நுட்பங்களை வடிவமைக்க விஞ்ஞானிகள உழைக்க வேண்டும் – டி ஆர் டி ஒ தலைவர் !!

வெள்ளிக்கிழமை அன்று டி ஆர் டி ஒ தனது 60ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைத்தது அதனை அடுத்து அன்று டி ஆர் டி ஒ தலைவர் பேசிய காணொளியில் விஞ்ஞானிகள் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும் எனவும்,

விண்வெளி, சைபர் பாதுகாப்பு சார்ந்த பாதுகாப்பு தொழில்நுட்பங்களை உருவாக்க உழைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதை தவிர பாதுகாப்பு துறை சார்ந்த பல்வேறு கல்லூரிகள் மற்றும் ஆய்வு நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

மேலும் கொரோனா ஒழிப்பில் டி ஆர் டி ஒ ஆற்றிய அளப்பரிய பணியை பற்றி குறிப்பிட்ட அவர் நாடு முழுவதும் உள்ள 40 டி ஆர் டி ஒ ஆய்வகங்கள் 100க்கும் அதிகமான கருவிகளை உருவாக்கியதை அப்போது நினைவு கூர்ந்தார்.