
ரஷ்ய கடற்படையின் முன்னனி போர்க்கப்பலாக இருந்தது தான் பெஸ்போக்னி ஸோவ்ரமென்னி ரக நாசகாரி போர்கப்பலாகும்.
ஒய்வு பெற்ற இக்கப்பல் தற்போது செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகர் அருகே கோட்லின் என்ற இடத்தில் மிதக்கும் மியூசியமாக நிறுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு ரஷ்யாவின் பால்டிக் கடற்படை பிரிவு தலைமையகமும் கப்பல் கட்டுமான பணிமனையும் அமைந்துள்ள கலினின்க்ராட் பகுதியில் இக்கப்பலில் இருந்து திருட்டு நடைபெற்றுள்ளது.
சுமார் 13டன்கள் எடை கொண்ட இரண்டு வெண்கல ப்ரோப்பலர்களின் மதிப்பும் சுமார் 5லட்சம் அமெரிக்க டாலர்களை தாண்டும் என சொல்லப்படுகிறது.
மேலும் இத்திருட்டில் ஈடுபட்ட இக்கப்பலின் முன்னாள் கட்டளை அதிகாரியும் அவரது கூட்டாளிகளும் போலி ப்ரோப்பலர்களை பொருத்தி உள்ளனர்.
ராணுவமயமாக்கப்பட்ட கலினின்க்ராடின் யாந்தர் கட்டுமான தளத்தில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது பல கேள்விகளை எழுப்பி உள்ளது மேலும் இங்கு தான் சில இந்திய கடற்படை கப்பல்கள் ஏற்கனவே கட்டப்பட்டன என்பதும் தற்போதும் மேம்படுத்தப்பட்ட தல்வார் கப்பல்தள் கட்டப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.