
நேற்று அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்றார், உடன் கமலா ஹாரிஸூம் முதலாவது பெண் துணை ஜனாதிபதியாக பதவி ஏற்றார்.
இதனையடுத்து பைடன் நிர்வாகம் முன்னாள் அதிபர் ட்ரம்பின் பல நிர்வாக முடிவுகளை மாற்றி அமைக்க போவதாக நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனை பிரதிபலிக்கும் விதமாக திடீரென இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதருடைய ட்விட்டர் கணக்கு இஸ்ரேல், காசா, மேற்கு கரை பகுதிகளுக்கான தூதர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.ஆனால் மீண்டும் உடனடியாக இஸ்ரேல் என மட்டும் மாற்றப்பட்டது.
மேலும் பாகிஸ்தான் உடன் ராணுவ உறவுகள் மீண்டும் உயிர்ப்பிக்க படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
இவை அனைத்துமே பதவி ஏற்ற 24 மணி நேரத்திற்குள்ளாக வந்த தகவல்கள் ஆகும், வருங்காலத்தில் மத்திய கிழக்கு, தெற்காசியா மற்றும் இந்தோ பசிஃபிக் பிராந்தியங்கள் மைய புள்ளியாக இருக்கும் என எதிர் பார்க்கலாம்.