
ஃபிலிப்பைன்ஸ் ராணுவ தளபதி ஜெனரல். சிரிலிட்டோ சோபேஜானா பிரம்மாஸ் திட்ட இயக்குனர் மற்றும் இந்திய தூதரை சந்தித்துள்ளார்.
ஃபிலிப்பைன்ஸ் சென்ற பிரம்மாஸ் திட்ட இயக்குனர் முனைவர் சுதிர் குமார் மற்றும் இந்திய தூதர் ஷம்பு குமாரன் ஆகியோரை அந்நாட்டு ராணுவ தளபதி சந்தித்து வரவேற்றுள்ளார்.
ஃபிலிப்பைன்ஸ் தனது கடலோர பாதுக்காப்பு கருதி பிரம்மாஸ் ஏவுகணைகளை வாங்க தீவிர ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் இறுதியில் அந்நாட்டு பாதுகாப்பு செயலர் டெல்ஃபின் லோரென்ஸா தற்போது இதற்கான நிதியை பெறுவது சிக்கவாக உள்ளது என தெரிவித்தார்.