ராஜஸ்தானில் பயிற்சியின் போது பாரா சிறப்பு படை அதிகாரி மரணம் !!

  • Tamil Defense
  • January 7, 2021
  • Comments Off on ராஜஸ்தானில் பயிற்சியின் போது பாரா சிறப்பு படை அதிகாரி மரணம் !!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இந்திய தரைப்படையின் சிறப்பு படையின் 10ஆவது பாரா சிறப்பு படை பட்டாலியன் இயங்கி வருகிறது.

இங்கு 10ஆவது பாரா சிறப்பு படை வீரர்கள் பாலைவனம், நீர்நிலைகளில் சிறப்பு பயிற்சிகளில் ஈடுபடுவது வழக்கம்.

அந்த வகையில் இன்று பயிற்சியில் ஈடுபட்டு இருந்த போது 4 வீரர்கள் ஹெலிகாப்டரில் இருந்து கெய்லானா ஏரியில் குதித்தனர்.

மூன்று வீரர்கள் வெளிவந்த நிலையில் நான்காவதாக குதித்த கேப்டன் பதவி வகிக்கும் அதிகாரி மாயமாகி உள்ளார்.

அவரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது, ஏரியில் குதித்த போது நீரடி பாறையில் மோதி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.