1 min read
தோல்வி அடைந்த ஏவுகணை சோதனையை வெற்றி என கூறி மறைத்த பாக் !!
சமீபத்தில் பாகிஸ்தான் ஷாஹீன் – 3 ஏவுகணை சோதனை நடத்தியது, இந்த சோதனை வெற்றி பெற்றதாகவும் பாகிஸ்தான் அறிவித்தது.
இந்த நிலையில் பாகிஸ்தான் பலூச் குடியரசு கட்சி வெளியிட்ட தகவலின் படி ஷாஹீன் ஏவுகணை தேரா காஸி கான் பகுதியில் ஏவப்பட்டு தேரா பக்டி மட் எனும் இடத்தில் விழுந்ததாகவும்,
உடனடியாக பாகிஸ்தான் படைகள் அங்கு வந்து ஏவுகணையை வெடிக்க செய்ததாகவும் இதன் காரணமாக அப்பகுதியில் பலத்த பொருட் சேதம் மற்றும் உயிர் சேதம் ஏற்பட்டு உள்ளதாகவும் செய்தி வெளியிட்டு உள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான் ஏவுகணை தோல்வி அடைந்ததை மூடி மறைத்தது அம்பலமாகி உள்ளது.