
மத்திய கிழக்கில் அடாவடித்தனம் மூலமாக தனது சக்தியை பெருக்க துருக்கி அதிக தீவிரமாக முயன்று வருவது அனைவருக்கும் தெரிந்ததே,
இந்த நிலையில் பாகிஸ்தான் உதவியுடன் அணு ஆயத தொழில்நுட்பங்களை பெற துருக்கி முயற்சிப்பது பல உலக நாடுகளை கவலை அடைய செய்துள்ளது.
சமீபத்தில் துருக்கி சென்றுள்ள பாகிஸ்தானிய பாதுகாப்பு குழு துருக்கி ராணுவ அதிகாரிகள் மற்றும் ஆயுத நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் உள்ளிட்டோரை சந்தித்து பேசியுள்ளது, இதில் அணு ஆயுத தொழில்நுட்ப பரிமாற்றம் குறித்து பேச்சும் இடம் பெற்றிருக்கும் என கூறப்படுகிறது.
ஏற்கனவே துருக்கி அதிபர் எர்டோகான் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் பாஜ்வாவிடம் தனிப்பட்ட முறையில் இதுகுறித்து கோரிக்கை வைத்ததாகவும் அதை பாஜ்வா ஏற்று கொண்டதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
எது எப்படியோ இது மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தையும் உலக அரங்கில் அதிர்வலைகளையும் ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.