
காஷ்மீரின் குல்கமில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி சோதனை நடவடிக்கைகளில் ஒரு பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளான்.மேலும் அந்த பயங்கரவாதியிடமிருந்து ஆயுதம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
குல்கமில் ஹட்டிபூரா என்னும் பகுதியில் ஆபரேஷன் ஹாட்டிபூரா என்ற பெயரில் ராணுவம், சிஆர்பிஎஃப் மற்றும் காஷ்மீர் காவல் துறை இணைந்து நடத்திய அதிரடி சோதனையில் ஒரு பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளான்.
அவனிடம் இருந்து ஒரு சீன கைத்துப்பாக்கி, ஒரு சீன கிரேனேடு இரண்டு AK மேகசின்கள், ஒரு ஜெர்மன் தயாரிப்பு காம்பஸ் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் தேடுதல் சோதனை நடைபெற்று வருகிறது.