இந்திய தரைப்படைக்கு புதிய துணை தளபதி நியமனம் !!

  • Tamil Defense
  • January 29, 2021
  • Comments Off on இந்திய தரைப்படைக்கு புதிய துணை தளபதி நியமனம் !!

இந்திய தரைப்படையின் துணை தளபதியாக லெஃப்டினன்ட் ஜெனரல் சி பி மொஹந்தி நியமிக்கப்பட்டு உள்ளார். முன்னதாக இவர் தென்னக ராணுவத்தின் தளபதியாக பணியாற்றி வந்தார்.

பூனே தேசிய பாதுகாப்பு அகாடமி, டேராடுன் இந்திய ராணுவ அகாடமி ஆகியவற்றில் பயிற்சி முடித்து ராஜ்புட் ரெஜிமென்ட்டில் 1982ஆம் ஆண்டு அதிகாரியாக இணைந்தார்.

தனது பணிக்காலத்தில் ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் படைகளை பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் வழிநடத்திய அனுபவமும், சீன எல்லையோரம் ஒரு மலையக போர்முறை பிரிகேடையும் வழிநடத்திய அனுபவம் கொண்டவர்.

ஊட்டி வெலிங்டன் DSSCல் பயின்றவர், மேலும் பல்வேறு பாதுகாப்பு தொடர்பான படிப்புகளை படித்து முடித்துள்ளார்.

காங்கோ ஜனநாயக குடியரசில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு படையின் பிரிகேடை வழிநடத்தியவர் மேலும் செஷல்ஸ் அரசாங்கத்திற்கு பாதுகாப்பு ஆலோசகராகவும் செயல்பட்டுள்ளார்.

மேலும் வடகிழக்கு இந்தியா, தெற்காசிய மற்றும் தென்கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளை பற்றிய பாதுகாப்பு படிப்பையும் முடித்தள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.