
ZSU-23-4 வான் பாதுகாப்பு அமைப்பை இந்தியாவின் பெல் (Bharat Electronics Limited) நிறுவனம் புதுப்பித்துள்ளது.அதில் மிக முக்கியமாக கருதப்படுவது பழைய RPK 2 ரேடாருக்கு பதிலாக புதிய 3D Active Phased Array Radar ரேடார் பொருத்தப்பட்டுள்ளது தான்.
Electronic Counter-Measure நிலையில் கூட ஸ்சில்கா எதிரி இலக்குகளை துல்லியமாக கண்டறிந்து கண்காணிக்க கூடியது.அனைத்து கால நிலைகளிலும் இரவு பகல் பொழுதுகளிலும் கூட இலக்கை வெற்றிகரமாக தாக்கியழிக்க கூடியது ஆகும்.
old Schilka
குறைந்த அளவிலான டீசலை உட்கொள்ளும் அளவிற்கு புதிய என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.பல இலக்குகளை கூட கண்டறிய கூடியது.மேலும் புதிய CBRN எனப்படும் வேதி,உயிரி,கதிர்வீச்சு மற்றும் நியூக்ளியர் பாதுகாப்பு அமைப்பும் பெற்றுள்ளது.
எதிரியின் விமானங்கள் மற்றும் வானூர்திகளை சுட்டுவீழ்த்தக்கூடியது ஆகும்.