
இந்தியா மற்றும் சீனா தனது கொம்புகளை சீவி எல்லையில் தருணத்திற்காக காத்திருக்கும் வேளையில் அமெரிக்க கடற்படை இந்திய கடற்படைக்கு அவரசமாக தனது நேவல் துப்பாக்கிகளை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.
அமெரிக்க கடற்படையிடம் இருந்து நேரடியாக இந்த மீடியம் காலிபர் துப்பாக்கிகளை பெற உள்ளது இந்திய கடற்படை.அவசரமாக மூன்று துப்பாக்கிகளை பெற்று அதை இந்திய கடற்படையிடம் உள்ள பெரிய கப்பல்களில் பொருத்த உள்ளது இந்தியா.கப்பல் எதிர்ப்பு மற்றும் விமான எதிர்ப்பு ஆபரேசன்களுக்காக இந்த துப்பாக்கி பயன்படுத்தப்படும்.
இந்த127 mm மீடியம் காலிபர் துப்பாக்கிகளை அமெரிக்காவின் BAE systems நிறுவனம் மேம்படுத்தியுள்ளது.மேலதிக 11 துப்பாக்கிகளை சுமார் $600 மில்லியன் டாலர்கள் செலவில் பெற இரு நாடுகளும் தற்போது பேசி வருகின்றன.இவை வருங்கால விசாகப்பட்டிணம் ரக டெஸ்ட்ராயர் கப்பல்களிலும் பொருத்தப்படும்.
இரஷ்ய தயாரிப்பு ஆயுதங்களை படிப்படியாக குறைத்து அமெரிக்க தயாரிப்பு ஆயுதங்களால் நிறைத்து வருகிறது இந்தியா.இரஷ்ய தயாரிப்பு நீர்மூழ்கி எதிர்ப்பு விமானங்களுக்கு மாற்றாக தற்போது அமெரிக்க பி-8ஐ விமானங்கள் இணைக்கப்பட்டு வருகின்றன.
அமெரிக்க தயாரிப்பு MH 60R வானூர்திகள் , அமெரிக்க Predator ஆளில்லா விமானங்கள் குத்தகை என பட்டியல் நீள்கிறது.