இந்திய விமானப்படைக்கு புதிய தளவாடங்கள் – ஏர்பஸ் விமானம், தேஜாஸ் மற்றும் இஸ்ரேலிய ட்ரோன்கள் !!

  • Tamil Defense
  • January 6, 2021
  • Comments Off on இந்திய விமானப்படைக்கு புதிய தளவாடங்கள் – ஏர்பஸ் விமானம், தேஜாஸ் மற்றும் இஸ்ரேலிய ட்ரோன்கள் !!

இந்திய விமானப்படை நவீனமயமாக்கலில் அதிக தீவிரம் காட்டி வருகிறது, அதன்படி அதிநவீன தளவாடங்களை வாங்கி குவிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.

இதை முன்னிட்டு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் இந்த வருடம் விமானப்படைக்கான மூன்று முக்கிய ஒப்பந்தங்களை பட்டியலிட்டு உள்ளது.

1) ஏர்பஸ் போக்குவரத்து விமானங்கள்

இந்திய விமானப்படை நீண்ட காலமாக ஆவ்ரோ748 வகை விமானங்களை சரக்கு மற்றும் வீரர்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்தி வருகிறது.

தற்போது அவற்றை மாற்றி விட்டு புதிதாக 56 ஏர்பஸ் சி295 விமானங்களை வாங்க இந்திய விமானப்படை முடிவு செய்துள்ளது.

2) தேஜாஸ்

83 தேஜாஸ் மார்க் 1ஏ போர் விமானங்களை படையில் இணைக்க இந்திய விமானப்படை வாக்குறுதி அளித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

3) இஸ்ரேலிய ஹெரோன் ட்ரோன்கள்

இஸ்ரேலிடமிருந்து குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மேம்படுத்தப்பட்ட ஹெரோன் ட்ரோன்களை வாங்க இந்திய விமானப்படை விரும்புகிறது.

இவை அனைத்துக்குமான ஒப்பந்தங்கள் இந்த வருடத்தில் கையெழுத்து ஆகும் என பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.