
தேஜாஸ் இலகுரக போர் விமானத்தில் தற்போது அமெரிக்காவின் F404-GF-IN20 என்ஜின்கள் பயன்படுத்தி வரப்படுகிறது.
சில வருடங்களாகவே இந்த என்ஜின்களை தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவில் உரிமம் வாங்கி தயாரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்த நிலையில் ஜெனரல் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இதற்கு விருப்பம் தெரிவித்த நிலையில் இந்திய விமானப்படை அதனை விரும்பவில்லை.
ஆகவே ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை இணைந்து உள்நாட்டிலேயே புதிய என்ஜினை தயாரிக்க முடிவு செய்துள்ளன.
இதற்கான பணிகள் விரைவில் துவங்கப்படும் என ஹெச்.ஏ.எல் தலைவர் தெரிவித்துள்ளார்.