தரைப்படையின் தெற்கு கட்டளையகத்திற்கு புதிய தளபதி நியமனம் !!

இந்திய தரைப்படையின் தெற்கு கட்டளையகத்தின் புதிய தளபதியாக லெஃப்டினன்ட் ஜெனரல் ஜே.எஸ். நைன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

இவர் தேசிய பாதுகாப்பு கல்லூரி, இந்திய ராணுவ கல்லூரி ஆகியவற்றில் பயிற்சி முடித்து இந்திய தரைப்படையின் டோக்ரா ரெஜிமென்ட்டுடைய 2ஆவது பட்டாலினில் தனது ராணுவ பணியை துவக்கினார்.

இடைப்பட்ட காலத்தில் ஊட்டி வெலிங்டன் பாதுகாப்பு சேவைகள், பணியாளர்கள் கல்லூரி மற்றும் செகந்திராபாத் பாதுகாப்பு மேலாண்மை கல்லூரி மற்றும் டாக்கா தேசிய பாதுகாப்பு கல்லூரி ஆகியவற்றில் படிப்புகளை முடித்தவர் ஆவார்.

காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் வீரர்களை வழிநடத்திய அனுபவம் மற்றும் தரைப்படையின் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்த அனுபவமும் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.