
இந்திய விமானப்படை தற்போது 1960களில் படையில் இணைக்கப்பட்ட 57 ஆவ்ரோ-748 நடுத்தர ரக போக்குவரத்து விமானங்களை பயன்படுத்தி வருகிறது.
இவற்றை மாற்றி விட்டு புதிய விமானங்களை வாங்க இந்திய விமானப்படை முடிவு செய்த நிலையில் அதற்கு ஏர்பஸ் நிறுவன தயாரிப்பான சி295 விமானம் தேர்வு செய்யப்பட்டது.
அந்த வகையில் 56 சி295 விமானங்களை சுமார் 2.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது.
இதில் 16 விமானங்கள் ஏர்பஸ் நிறுவனத்தால் தயாரித்து அனுப்பப்படும் மீதமுள்ள 40 விமானங்களும் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் என்பது கூடுதல் தகவல்.