துருக்கி பாக் கூட்டணிக்கு எதிராக இந்தியா க்ரீஸ் இடையில் ஒத்துழைப்பு அதிகரிக்க வேண்டும் : க்ரிஸ் எம்.பி !!
1 min read

துருக்கி பாக் கூட்டணிக்கு எதிராக இந்தியா க்ரீஸ் இடையில் ஒத்துழைப்பு அதிகரிக்க வேண்டும் : க்ரிஸ் எம்.பி !!

சமீபத்தில் இந்தியா மற்றும் க்ரிஸ் இடையிலான ஒத்துழைப்பு குறித்த வெபினார் ஒன்று தில்லியில் உள்ள ரெட் லான்டர்ன் அனாலிடிகா எனும் அமைப்பால் நடத்துப்பட்டது.

இதில் இந்தியா சார்பில் ஜவஹர்லால் நேரு பல்கலைகழக துணை பேராசிரியர் முனைவர். வந்தனா மிஷ்ரா மற்றும் க்ரீஸை சேர்ந்த ஐரோப்பிய ஒன்றிய எம்.பி. இம்மானிய்ல் ஃப்ராக்கோஸ், க்ரிஸ் செய்திதாளான பென்டாஸ் போஸ்டாகாமாவின் ஆசிரியர் ஆண்ட்ரியாஸ் மோன்ட்ஸூருலியாஸ் மற்றும் சிலர் கலந்து கொண்டனர்.

அப்போது முனைவர். வந்தனா பேசுகையில் பல நூற்றாண்டுகளாக இந்தியா மற்றும் க்ரிஸ் இடையே வர்த்தக உறவுகள் உள்ளதாகவும், இரு நாடுகளும் உலகின் பழமையான நாகரிகங்களை கொண்டவை எனவும் இரு நாடுகள் இடையே இயற்கையாகவே பல்வேறு ஒற்றுமைகள் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அதை போல ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் இம்மானிய்ல் ஃப்ராக்கோஸ் பேசுகையில இந்தியா மற்றும் க்ரீஸ் ஆகியவை பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு முன்னே தோன்றிய நாகரிகங்கள் என்றார்.

மேலும் இரு நாடுகளும் தங்களது அண்டை நாடுகளிடம் இருந்து ஒரே விதமான பிரச்சினைகளை சந்திப்பதாகவும் அவர் கூறினார்.

ஆண்ட்ரியாஸ் மோன்ட்ஸூருலியாஸ் பேசும் போது துருக்கி மற்றும் பாகிஸ்தான் இடையே ஒத்துழைப்பு அதிகரித்துள்ளது, இரு நாடுகளும் ராணுவ ஒத்துழைப்பு மற்றும் பயிற்சிகளை அதிகரித்துள்ளன.

ஆகவே இந்தியா மற்றும் க்ரீஸ் ஆகிய நாடுகள் மத்திய தரைக்கடல் பகுதியில் வலிமையான பொருளாதார மற்றும் ராணுவ உறவை நிறுவ வேண்டும் என வலியுறுத்தினார்.