தரைப்படையில் அதிகாரியாக இணைய உள்ள வீரமரணம் அடைந்த வீரரின் மனைவி !!

கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் காயமடைந்து 40 நாட்கள் தீவிர சிகிச்சை பெற்றும் வீரமரணம் அடைந்த வீரர் நாயக். தீபக் நைன்வால்.

இவரது மனைவி ஜோதி நைன்வால் ஆவார், கணவர் இறந்த பின்னர் தளராமல் இரண்டு வருடங்கள் கடினமாக உழைத்து ராணுவ அதிகாரிக்கான தேர்வில வெற்றி பெற்றுள்ளார்.

இரு குழந்தைகளையும் பெற்றோரிடம் விட்டுவிட்டு வருகிற ஜனவரி 30ஆம் தேதி சென்னை அதிகாரிகள் பயிற்சி மையத்தில் பயிற்சிக்காக இணைய உள்ளார் ஜோதி.

கணவரின் பாதையையே பின்பற்றி செல்லும் வீரப்பெண் ஜோதிக்கு ராயல் சல்யூட் .