
கடந்த வாரம் இந்தியா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேம்படுத்தியுள்ள நடுத்தூர வகை வான் பாதுகாப்பு ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் நிறுவனம் கூறியுள்ளது.50-70கிமீ தூரத்திற்குள் வரும் எதிரியின் விமானங்கள்,க்ரூஸ் ஏவுகணைகள் ஆகியவற்றை சுட்டுவீழ்த்த வல்லது இந்த அமைப்பு.
டிஆர்டிஓ மற்றும் இஸ்ரேலின் ஐஏஐ இணைந்து மேம்படுத்திய இந்த அமைப்பை இந்தியா மற்றும் இஸ்ரேல் நாட்டு இராணுவங்களின் பயன்பாட்டில் உள்ளன.இந்த அமைப்பில் ஒரு கட்டளை மற்றும் கட்டுப்படுத்தி அமைப்பு, ஒரு அதிநவீன ரேடார் , நகரக்கூடிய லாஞ்சர் மற்றும் இடைமறிப்பு ஏவுகணைகள் ஆகியவை இருக்கும்.
ஏவுகணை வெற்றிகரமாக இலக்கை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இலக்கை ரேடார் யூகித்தறிந்த பிறகு இடைமறிப்பு ஏவுகணையை ஏவி குறிப்பிட்ட பாதையில் சென்ற ஏவுகணை இலக்கை கண்டறிந்து வெற்றிகரமாக தாக்கி அழித்துள்ளது.
இந்தியா இஸ்ரேல் கூட்டு பாதுகாப்பு உறவுக்கு எடுத்துக்காட்டாக இந்த அமைப்பு உள்ளது.கோவிட்-19 காரணமாக பல்வேறு தடைகள் இருந்தாலும் இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.