மலேசிய தமிழரை மீட்ட இந்திய கடற்படை !!

நேற்று காலை சிங்கப்பூர் நாட்டு பதிவு கொண்ட எண்ணெய் கப்பலான எம்.வி ஈகிள் டாம்பா உதவி கோரியது.

மும்பையில் இருந்து 18 நாட்டிகல் மைல் தொலைவில் இருந்த கப்பலில் பணியாற்றி வந்த 34 வயதான மலேசி தமிழரான திருமதி. கீதா செல்வராஜா கடுமையான மூச்சு திணறல் காரணமாக அவதிப்படுவதாக கப்பல் தகவல் தெரிவித்தது.

இதனையடுத்து இந்திய கடற்படை தனது சீ கிங் ரக ஹெலிகாப்டரை அனுப்பி அவரை பத்திரமாக மீட்டு கரை கொண்டு வந்தது.

கடற்படை தளத்தில் இருந்து ஆம்புலன்ஸ் வழியாக மும்பையில் உள்ள சைஃபீ மருத்துவவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.