
மேஜர் அனூப் மிஷ்ரா இந்திய தரைப்படையின் பொறியியல் படைப்பிரிவு அதிகாரி.இவர் புனேயில் உள்ள ராணுவ பொறியியல் கல்லூரி உதவியுடனும் தனியார் நிறுவனம் ஒன்றின் உதவியுடனும் ஒரு கருவியை கண்டுபிடித்துள்ளார்.
இந்த கருவி மூலமாக சுமார் 400மீட்டர் தொலைவில் மறைந்து இருந்து சுடும் நபரை அவரது தோட்டா வரும் பாதையை வைத்தே கண்டுபிடிக்க கூடிய கருவியை வடிவமைத்து உள்ளார்.இந்த கருவிக்கு “பார்த்” என பெயர் இடப்பட்டு உள்ளது. இத்தகைய கருவி இந்தியாவில் தயாரிக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.
வெளிநாடுகளில் இருந்து வாங்கப்படும் இத்தகைய கருவியின் விலை சுமார் 65லட்சம் ஆகும், ஆனால் பார்த் கருவியின் விலை வெறும் 3 லட்சம் தான்.மேஜர் அனூப் மிஷ்ரா ஏற்கனவே சக்தி வாய்ந்த குண்டு புகாத உடையை உருவாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.