
அந்தமான் தீவுகளில் முப்படைகளும் கடலோர காவல்படையும் பங்கேற்ற கவாச் எனும் போர்பயிற்சி நடைபெற்றது.
இந்த பயிற்சிகளில் நிலநீர் போர்முறை, வான்வழி மற்றும் கடல்வழி தாக்குதல், கண்காணிப்பு, நீர்மூழ்கி தாக்குதல் ஆகியவை செய்து பார்க்கப்பட்டது.
இந்த பிரமாண்ட பயிற்சியில் ஜாகுவார் விமானங்கள், கடற்படை கார்வெட்கள் உள்ளிட்ட தளவாடங்கள் பங்கு பெற்றன.
இந்த பயிற்சிகள் படைகளிடையே ஒருங்கிணைப்பை அதிகபடுத்த உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.